×

தீயணைப்பு வீரர்கள் 200 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: விழுப்புரம் ஆட்சியர் துவக்கி வைத்தார்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேசிய அளவிலான தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திலிருந்து சைக்கிள் பேரணியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியில் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர். பேரணி விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் 9 மணிக்கு துவங்கி உளுந்தூர்பேட்டை, வேப்பூர், பெரம்பலூர் வழியாக திருச்சி துணை இயக்குனர் அலுவலகம் வரையில் சுமார் 200 கிமீ தூரத்துக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.இதில் விழுப்புரம் மாவட்ட அலுவலர் ராபின் காஸ்ட்ரோ, கடலூர் மாவட்ட அலுவலர் லோகநாதன் மற்றும் நிலைய அலுவலர்கள் ஜெய்சங்கர், முகுந்தன் உள்பட 20 தீயணைப்பு வீரர்கள் மொத்த தூரமாக 200 கிலோ மீட்டர் தூரத்தை முழுமையாக நிறைவு செய்ய உள்ளனர்….

The post தீயணைப்பு வீரர்கள் 200 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: விழுப்புரம் ஆட்சியர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Archer ,National-level Fire Charities Week ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்