×

சாக்லேட் குன்றுகள்: பிலிப்பைன்சின் அறிவியல் அதிசயம்

பிலிப்பைன்ஸில் போஹோல் மாகாணத்துக்குள் நுழைந்தாலே போதும், அந்த அதிசய இடத்துக்கு வழிசொல்வார்கள். அடர்ந்த காட்டுக்குள் இரண்டு மணி நேரம் பயணம் செய்தால் அந்த இடத்தை அடையலாம். சுமார் 1,800 அழகழகான மலைக்குன்றுகள். கூம்பு வடிவிலான அந்த மலைகள் 50 சதுர கிலோ மீட்டருக்கு விரிந்துகிடக்கின்றன.

பச்சைப்புற்கள் மலைகளைச் சுற்றி படர்ந்துள்ளன. இந்தக் காட்சி தனி அழகு என்றால், வறண்ட காலத்தில் வேறு விதமான அழகு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது. ஆம்; வறண்ட காலத்தில் அந்தப் புற்கள் வாடி பழுப்பு நிறத்துக்கு மாறிவிடுகின்றன. ஒவ்வொரு மலையும் ராட்சத சாக்லேட் குன்று போல காட்சி தருகின்றன. அதனா லேயே இதற்கு சாக்லேட் குன்றுகள் என்று பெயர்.

Tags : Philippines , When you enter Bohol Province in the Philippines, you will be led to that wonderful place.
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!