மெட்ரோ ரயில்வே சார்பில் மாரத்தான் போட்டி

சென்னை: மெட்ரோ ரயில்வே சார்பில் மாரத்தான் போட்டி ஜனவரி 5ம் தேதி நடத்தப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம்  சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘உடல் சம்பந்தமான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை மெட்ரோ ரயில்வே ஊக்குவித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னையில் வரும் ஜனவரி 5ம் தேதி மாரத்தான் போட்டி  நடக்கிறது. இது சமூக காரணங்களுக்காகவும், காசாபதூர் ஏரி மீட்டெடுப்புக்காகவும் நடத்தப்படுகிறது.

இந்த மாரத்தான் போட்டி 10, 21, 31, 42 கி.மீ பிரிவுகளில் நடக்கிறது. அனைத்து போட்டிகளும், நந்தனம் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் துவங்கும். 10 கி.மீ போட்டி தரமணி, சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, மற்ற போட்டிகள் கிழக்கு கடற்கரை சாலையில் நிறைவுபெறும். இப்போட்டியில் பங்கேற்போருக்காக அனைத்து மெட்ரோ ரயில்நிலையங்களில் உள்ள பார்க்கிங் இலவசமாக காலை 3 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். இதில் பங்கேற்க விரும்புவோர், www.thechennaimarathon.com என்ற இணையதள முகவரியில் வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

Related Stories:

>