×

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு,.. 6 அதிகாரிகளுக்கு முன்ஜாமின் வழங்கியது டெல்லி சிறப்பு நீதிமன்றம்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 6 அதிகாரிகளுக்கு முன்ஜாமின் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தில் உறுப்பினர்களாக இருந்த 6 பேருக்கும் முன்ஜாமின் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 பேரின் முன்ஜாமின் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த‌போது  அவருக்கு  கீழ் 6 அதிகாரிகளும் பணியாற்றி இருந்தனர். 6 அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் 6 அதிகாரிகள் பெயரும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Munjam ,Delhi Special Court ,court ,Delhi , INX Media abuse case, 6 officers, Munjam case, Delhi Special Court
× RELATED தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த...