நன்றி குங்குமம் முத்தாரம்
தென் கொரியாவில் ஓடுகின்ற ஒரு நதி இம் ஜின். வட கொரியாவின் எல்லையில் அமைந்துள்ளது நதி. கடந்த வாரம் ஒரு நாள் திடீரென்று சிவப்பு வண்ணமாக மாறிவிட்டது இம்ஜின்.
ஏன் அப்படியாகிவிட்டது என்று ஆராய்ந்ததில் பேரதிர்ச்சி காத்திருந்தது. பன்றிக்காய்ச்சல் உலகையே ஆட்டிப் படைத்துள்ளது. இதற்கு தென்கொரியாவும் விதி விலக்கல்ல. பன்றிக் காய்ச் சலைத் தடுக்கும் முயற்சிக்காக 47 ஆயிரம் பன்றிகளைக் கொன்று புதைத்துள்ளனர் தென்கொரிய அதிகாரிகள். பன்றிகள் புதைக்கப்பட்ட இடத்தில் மழை பெய்திருக்கிறது.
அதனால், இறந்து போன பன்றிகளின் உடலில் இருந்த ரத்தம் கசிந்து நதியில் கலக்க, சிவப்பு நதியாகி விட்டது நதி. தொற்றுக்கிருமிகளை நீக்கிய பின்தான் பன்றிகளைக் கொன்றிருக்கின்றனர். அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நதியில் பன்றியின் ரத்தம் கலக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
