×

தண்ணீர் தேவையில்லை: புதிய கழிப்பறை மாடலை வெளியிட்ட பில்கேட்ஸ்

பில்கேட்ஸ் சீனாவில் புதிய வகை கழிவறை மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின் உரையில் பேசிய பில்கேட்ஸ், உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தேவையான பாதுகாப்பான சுகாதாரம் இல்லை என கூறினார்.  அதேபோல் பில் கேட்ஸ் வீடியோ ஒன்றை டுவிட் செய்திருந்தார். அதில், கழிவறை உட்பட அடிப்படை வசதிகள் கூட இல்லாத நாடுகள் மற்றும் பகுதிகளுக்கு அவர்களது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.   

அதே போல், பெய்ஜிங்கில் முக்கிய உரையை வழங்கும்போது அவருடன் கழிவறை குடுவையை வைத்திருந்தார். அதில் பேசிய பில்கேட்ஸ், இந்த பீக்கரில் என்ன இருக்கிறது என்று நீங்கள் யூகிக்கக்கூடும். நீங்கள் சொல்வது சரிதான். மனித மலம். இந்த சிறிய அளவிலான மலம் 200 டிரில்லியன் ரோட்டா வைரஸ் செல்கள், 20 பில்லியன் ஷிகெல்லா பாக்டீரியா மற்றும் 100,000 ஒட்டுண்ணி புழு முட்டைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கக்கூடும் என்று பேசினார். அதன்மூலம் இந்த கழிவறை வசதி கூட இல்லாமல் உலகின் பல்வேறு நாடுகள் உள்ளது என சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட, சுமார் 500,000 குழந்தைகள் இறப்பதற்கு மோசமான சுகாதாரமே காரணம் என கூறினார். வெளிப்புறத்தை மனிதர்கள் கழிவறையாக பயன்படுத்துவால், மக்களின் வீடுகளைச் சுற்றியுள்ள நிலத்தடி நீர் மாசுபடும் என தெரிவித்தார்.  புதிய மாடல் கழிப்பறையை அறிமுகம் செய்து வைத்த பில் கேட்ஸின் நோக்கம், உலகளவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் ஒரு புதுவகை துப்புரவுத் தீர்வுகளைத் தொடங்குவதாகும். இந்த புனரமைக்கப்பட்ட பல கழிப்பறைகள் தற்போது தென்னாப்பிரிக்காவின் டர்பனில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.  

தென்னாப்பிரிக்காவின் டர்பனில் பலருக்கு நவீன சுகாதாரம் இல்லை, அதாவது கழிப்பறைக்கு அதை முறையாக பராமரிக்காமல் மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது. ஒரு பொதுவான கழிப்பறைக்கு தண்ணீர் தேவை. ஆனால் இந்த புதிய அணுகுமுறைகளுக்கு தண்ணீர் தேவையில்லை எனவும் சில நேரங்களில் மின்சாரமும் தேவையில்லை எனவும் சூரிய சக்தியில் இயங்கும் எனவும் கூறினார். இந்த கழிவறைகள் மாடல் கழிவுகளிலிருந்து நோய்க்கிருமிகளை அகற்றும் வகையிலான அமைப்புகள் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.



Tags : Billcats , Bill Gates, toilet, water
× RELATED அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய...