×

அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வாய்ப்பு உள்ளது: பில்கேட்ஸ் பேச்சு

டெல்லி: அடுத்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளதாக உலக பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனர்களுள் ஒருவருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி முந்தைய கணிப்பில் இருந்து குறைத்து 5.6 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. அரசின் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே வங்கிசாரா நிதி நிறுவனங்கள் நிதி சிக்கலில் திண்டாடிவருகின்றன. வங்கிகளும் வாராக்கடன் சுமையில் இருந்து மீள்வதற்காக தனி நபர் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரையில் கடன்கள் கொடுப்பதை குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காகவும் வாராக்கடன் சுமையை குறைப்பதற்காகவும் அரசு வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதிலும் அதிருப்தியும், குழப்பமும் நீடிக்கிறது. தொடர்ந்து இதனை சரிசெய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அறக்கட்டளையின் பணிகளை மதிப்பாய்வு செய்யும் விதமாக பில்கேட்ஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் இந்திய பொருளாதாரம் தொடர்பாக பேசிய பில்கேட்ஸ்; அடுத்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வாய்ப்பு உள்ளது.

நிதி சேவை மற்றும் மருந்தியல் துறையில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும் கூறினார். மேலும் இந்தியாவில் உள்ள ஆதார் சேவையை வெகுவாக பாராட்டியுள்ளார்.


Tags : Billcats ,Indian , Indian Economy, Biggest Growth, Billcats
× RELATED பொருளாதாரத்துக்கு கைகொடுக்கும்...