×

பருத்தி நாப்கின்

நன்றி குங்குமம் முத்தாரம்

கோவையைச் சேர்ந்த இஷானாதான் இணையத்தில் இப்போது ஹாட் டாக். 18 வயதான இஷானா மாதவிடாய் காலத்தில் சானிடரி நாப்கின்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அது அவருக்கு உடல் ரீதியாக பிரச்னைகளைக் கொடுக்க, நாமே ஏன் நாப்கின்களைத் தயாரிக்கக்கூடாது என்று தோன்றியிருக்கிறது. தூய பருத்தியில் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காத, முக்கியமாக கெமிக்கல் இல்லாத நாப்கின்களைத் தயாரித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்குத் தீங்கில்லாத இந்த நாப்கினை துவைத்து மறு படியும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்போது கோவை பெண்கள் மத்தியில் இஷானா வெகுபிரபலமாகிவிட்டார். வெறுமனே நாப்கின்களைத் தயாரித்து  விற்பது  இஷானா வின் நோக்கமல்ல;   தன்னைப் போலவே ஆர்வமுடையவர்களுக்கு பருத்தி நாப்கினை எப்படிச் செய்யலாம்  என்று கற்றும் தருகிறார். தையல் கலையில் டிப்ளமோ பயின்றவர் இஷானா என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Coimbatore, Hot Dog, Sanitary, Cotton Napkin
× RELATED அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில்...