ஆலந்தூர்: சென்னை ஜமீன் பல்லாவரம், கிருஷ்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 20 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று காலை கிருஷ்ணா நகரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜெயந்திபாபு தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் செந்தில்குமார், துணை செயலாளர் பிரபாகரன், இணை செயலாளர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தனர்.இதில் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்து கொண்டு கிருஷ்ணா நகரில் 20 சிசிடிவி கேமரா இயக்க பணிகளை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘நான் எம்எல்ஏவான பிறகு பல்லாவரத்தில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது’’என்றார்.விழாவில் பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், பிரபு, முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், ஜி.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.