×

ஒரே ஏரி திரும்ப திரும்ப புனரமைக்க அறிக்கை தயாரிப்பு மீண்டும் 1000 கோடி கடன் கேட்கும் அதிகாரிகள்: முதல்வரை ஏமாற்றும் பொதுப்பணித்துறை

சென்னை: பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளது. இதில், நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ₹3 ஆயிரம் கோடி செலவில் 5 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்பட்டது. தற்போது 2ம் கட்டமாக 4,778 ஏரிகள் புனரமைக்க  உள்ளது. இந்த நிலையில் குடிமாரமத்து திட்டத்தின் கீழ் 2016ல் 1513 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 2017-18ல் 1511 ஏரிகள் புனரமைப்பு பணி எடுக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட பணிகள் இன்னும்  தொடங்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2019-20ல் 1829 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு கடந்த ஜூன் மாதத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்ேபாது வரை 65 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள பணிகள் நடந்து  வருகிறது. இதை தவிர்த்து விரைவுபடுத்தப்பட்ட பாசன திட்டம், ஆர்ஆர்ஆர் திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் வரும் ஆண்டில் ₹1000 கோடியில் 5 ஆயிரம் ஏரிகளை புனரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டமதிப்பீட்டை விரைந்து தயார் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  

ஏற்கனவே, கடந்த 6 ஆண்டுகளில் 14 ஆயிரம் ஏரிகள் புனரமைப்பு பணி முடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படியிருக்கையில், புதிதாக 5 ஆயிரம் ஏரிகள் புனரமைப்பு பணிக்கு ஏரிகளை எப்படி தேர்வு செய்வது என்பது தெரியாமல்  பொறியாளர்கள் விழிபுதுங்கி நின்றனர். இருப்பினும் உயர் அதிகாரிகள் மற்ற திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் முடிந்த ஏரிகளையும், மீண்டும் புனரமைக்கும் வகையில் அறிக்கை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக, 5  ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்பட்ட ஏரிகளையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வந்து அந்த ஏரிகளும் புனரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரின் உத்தரவு என்பதால்  பொறியாளர்களும் பதில் ஏதும் தெரிவிக்காமல் ஒப்புதல் அளித்ததன் விளைவாக அரசுக்கு தேவையில்லாமல் ₹1000 கோடி நிதி செலவு தான் ஏற்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.


Tags : lake ,Billionaires ,Public Works Department , Report preparation, same lake ,repeatedly, Public Works ,Department
× RELATED தென்காசி குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை...