×

பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி :பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது என்றும் மதம் சார்ந்த நம்பிக்கையை கருத்தில் கொண்டோம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதே சமயம், மதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது என்றும் மத வழிபாடு, நம்பிக்கை என்ற பெயரில் பாகுபாடு கூடாது என்றும் பெண்களுக்கான வழிபாட்டு உரிமை என்பது அனைத்து மதம் சார்ந்த இடங்களுக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.


Tags : women ,Supreme Court ,Sabarimala ,mosques ,temples , Women, Sabarimala, Supreme Court, Opinion, Review
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...