×

செட்டிநாடு வேர்க்கடலை குழம்பு

முதலில் ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை விட்டு, அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வேக வைத்த வேர்க்கடலையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயை குறைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பல்லாரியைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும். மணமிக்க செட்டிநாடு வேர்க்கடலை குழம்பு தயார்.


Tags : Chettinad , Chettinad peanut broth
× RELATED பராசக்தி திரைப்படமும் தமிழ்நாட்டில்...