×

பருவநிலை மாற்றத்தை அறிய உதவும் மரம்!

நன்றி குங்குமம்

‘‘கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று எங்கே குளிர் அதிகம்..?’’இதை அறிய கூகுளில் தட்டினால் போதும். பதில் கிடைத்து விடும். அவ்வளவு ஏன்... கடந்த மாதம், கடந்த வருட காலநிலையைக் கூட கூகுள் தேடிக் கண்டுபிடித்துத் தந்துவிடும்.

ஆனால், 800 வருடங்களுக்கு முன்பு உலகின் காலநிலை எப்படியிருந்தது என்பதை அறிய கூகுளால் முடியாது; மரத்தால் முடியும்! ஆம்; 800 வருடங்களாக இங்கிலாந்தில் கம்பீராக நின்றுகொண்டிருக்கும் ஓக் மரம் காலநிலை எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை அறிய உதவுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதன் வளையங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலமாக காலநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை துல்லியமாக சொல்லிட முடியுமாம். இந்த ஆராய்ச்சி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த போராடும் போராளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

த.சக்திவேல்


Tags : oak Tree,Climate Change,england
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...