×

தொழில் செய்ய ஏற்ற நாடுகள் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 63வது இடம்

புதுடெல்லி: உலக அளவில் 190 நாடுகளில் முதலீடு செய்வதற்கும் தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற நாடுகள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் உலக வங்கி தனது ஆய்வு அறிக்கையில் வெளியிடும். அந்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளில் கடந்த ஓர் ஆண்டில் 14 இடங்குகளுக்கு முன்னேறிய இந்தியா, பட்டியலில் 77வது இடத்தில் இருந்து 63வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதில் கடந்த ஆண்டு 67.3 சதவீதம் புள்ளிகள் பெற்றிருந்த இந்தியா, தற்போது 71.0 சதவீதம் பெற்றுள்ளது. இதன் மூலம் 2020ல் தொழில் தொடங்குவதற்கு நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 190 நாடுகள் இடம்பெஹ்றுள்ள பட்டியலில் 77வது இடத்தில் இருந்து 63வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கி கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொழில் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் ஏற்ற சூழ்நிலையை கணிப்பதற்கு 10 அளவீடுகளின் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன. கடந்த 2019 மே 1ம் தேதியுடன் முடிந்த ஓர் ஆண்டு காலத்தில் நாடுகளில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 10 பிரிவுகள் வருமாறு: தொழில் தொடங்குதல், கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறுதல், மின்சார வசதி, சொத்துகளை பதிவு செய்தல், கடன் வசதி பெறுதல், சிறுபான்மை முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு, வரி செலுத்துவதற்கான எளிய நடைமுறை, எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்தல், ஒப்பந்தங்களை அமல்படுத்துதல், திவால் நிலைமை பிரச்னைக்கு தீர்வு காணுதல் ஆகியவை. 11வது பிரிவாக தொழிலாளர்கலை பணிக்கு அமர்த்துதல். இது ஆய்வு எடுத்துக் கொண்டாலும் ஒரு காரணியாக சேர்க்கப்படவில்லை.

தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்த 294 சீர்திருத்த நடவடிக்கைகளை 115 நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொண்டதாக உலக வங்கி தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கு, இந்தியா எடுத்து வரும் சீர்திருக்க நடவடிக்கைகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று அந்த அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது.



Tags : India , India ranked, 63rd , World Business, List
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!