×

மலிவு விலையில் தயாராகும் ரெனோ கார்

பிரெஞ்ச் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் ரெனால்ட் நிறுவனம், இந்திய வாகன சந்தையை மையமாக கொண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தனக்கென நிலவி வரும் சந்தை எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், அவ்வப்போது புதிய தயாரிப்புகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.இதன் முதல் மின்சார காரை வருகிற 2022ம் ஆண்டிற்கு பின்னரே அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக, மலிவு விலையில் அதிக தூரத்தில் பயணம் செய்யும் மின்சார கார்களை களமிறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ரெனால்ட் நிறுவனத்தின் இந்த நிலைப்பாடு குறித்த தகவலை, அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் வெங்கட்ராம் மமில்ல பல்லே உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவில் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களை காட்டிலும் கடுமையான போட்டி கொடுக்கிற வகையிலான விலையில் மின் வாகனங்களை களமிறக்க திட்டமிட்டு வருகிறோம். அதேசமயம், அது சர்வதேச தரத்திற்கு இணையானதாகவும் இருக்கும்” என்றார். இந்த காரின் உற்பத்திக்காக பாரிஸில் உள்ள ஓர் குழுவுடன் இணைந்து ரெனால்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மலிவு விலை மின்சார காரை தொடர்ந்து, அந்நிறுவனம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான காம்பேக்ட் ரக எஸ்யூவி காரையும் தயாரித்து வருகிறது. சமீபத்தில்தான், புதுப்பிக்கப்பட்ட க்விட் மற்றும் டிரைபர் எம்பிவி ரக காரை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் தனக்குள்ள சந்தையை மேலும் விரிவாக்கம் செய்துகொள்ளும் விதமாக, சப்-4 மீட்டர் ரகத்திலான புதிய எஸ்யூவி ரக காரை தயாரித்து வருகிறது. இது, இந்தியாவிற்காக பிரத்யேகமாக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலையும் மமில்ல பல்லே உறுதி செய்துள்ளார்.புதிதாக தயாராகி வரும் அந்த காருக்கு எச்பிசி என்ற குறியீட்டு பெயரை அந்நிறுவனம் வைத்துள்ளது. இது, ட்ரைபர் காரின் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படலாம் என தெரிகிறது. மேலும், இந்த காரில் 1.0 லிட்டர் எஸ்சிஇ (SCe) டர்போசார்ஜட் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற உள்ளது. இது பிஎஸ்-6 தரம் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரைபர் எம்பிவி ரக காரைவிட, மலிவு விலையில் இந்த காரை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இந்த விலைக்குறைப்பிற்காக ஒரு அம்சங்களை நீக்கும் முயற்சியில் ரெனால்ட் நிறுவனம் செய்து வருகிறது. அதேசமயம், இந்த நடவடிக்கையின் காரணமாக, அந்த காரில் எந்த விதத்திலும் குறைவாக தோன்றாது என ரெனால்ட் தெரிவித்துள்ளது. ஆகையால், இந்த காரில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்புடன் கூடிய தொடுதிரை இன்போடெயிண்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமேண்ட், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், மாருதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, ஹுண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், போர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags : Renault , affordable ,prices, Renault, car, ready
× RELATED ரெனால்ட் லிமிடெட் எடிஷன் கார்கள்