×

ரெனால்ட் லிமிடெட் எடிஷன் கார்கள்

ரெனால்ட் இந்தியா அதன் கிகர், டிரைபர் மற்றும் கிவிட் ஆகியவற்றை உள்ளடக்கிய அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ள இதில், கருப்பு நிறம் மற்றும் ஸ்டார்டஸ்ட் சில்வர் ஆக்சென்டுகள் போன்ற கவரும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் மிரர் மானிட்டர், ஒளிரும் ஸ்கஃப் பிளேட் ஆகியவை வாடிக்கையாளரின் கேபின் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன. ஸ்மார்ட் மிரர் மானிட்டர் 9.66 இன்ச் வண்ணத் திரையுடன் உள்ளது. ரியர்வியூ மிரர் ஆகவும் பயன்படுத்தலாம்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.62 கிமீ மைலேஜ் வழங்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய கார் மதிப்பீட்டு திட்டமான குளோபல் என்சிஏபி மூலம் பாதுகாப்பிற்கான 4 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. டாப் வேரியண்ட்களை விட டிரைபர் மற்றும் கிகர் அர்பன் நைட் லிமிடெட் எடிஷன் சுமார் ரூ.14,999, கிவிட் அர்பன் நைட் எடிஷன் ரூ.6,999 அதிகமாகும். வேரியண்ட்களுக்கு ஏற்ப ஷோரூம் விலை சுமார் ரூ.8.37 லட்சம் முதல் ரூ.11.14 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ரெனால்ட் லிமிடெட் எடிஷன் கார்கள் appeared first on Dinakaran.

Tags : Renault ,Renault India ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...