×

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: பாஜக சார்பில் போட்டியிட்ட டிக் டாக் பிரபலம் சோனாலி போகத் தோல்வி

ஹரியானா: ஹரியானாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட டிக் டாக் பிரபலம் சோனாலி போகத் தோல்வி அடைந்தார். தமிழகம் உட்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலும், 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்  கடந்த 21ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு  இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. இந்த தொகுதிகளில் இறுதியாக 1,169  வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி  தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இண்டியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நிலவி வருகிறது. பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனிடையே அடம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டிக் டாக் பிரபலம் சோனாலி போகத் தோல்வி அடைந்துள்ளார்.

குல்தீப் பிசோனி 64 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார். சோனாலி போகத் 34 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார். இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிசோனிக்கிடம் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


Tags : Haryana Assembly Elections ,Sonakali ,Dick Dog ,BJP ,Haryana Assembly Election , Haryana Assembly elections, BJP, sonali phogat
× RELATED முயல்களை வேட்டையாடி சமைத்தல், பூனையை...