×

தெலுங்கானா, குமரிக்கடல் இடையே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் உள், தென் தமிழகத்தின் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெலுங்கானா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு இடையே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக உள் மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், நீலகிரி மாவட்டம் தேவாலா, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். சில இடங்களில் மேகங்கள் கூடி மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸும் நிலவக்கூடும். இதே வானிலை நாளையும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. டெல்லி வரை தென்மேற்கு பருவமழை விலகிவிட்ட நிலையில் இன்னும் 10 நாட்களில் ஆந்திரா வரை விலகிவிடும் என்றும், வருகிற 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.


Tags : atmosphere ,Telangana ,South Tamil Nadu ,Kumarikal ,Kumari Sea. Telangana , Rain, Chance, Telangana, Cumulus, Overlay, Cycle
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...