×

திருநங்கை தீக்குளித்து சாவு

பெரம்பூர்: வியாசர்பாடி பி கல்யாணபுரம் 6வது தெருவை சேர்ந்தவர் சூர்யா (எ) லாரா(29). திருநங்கை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்து விட்டு தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி வந்துள்ளார். பெற்றோர் பலமுறை இவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்று காண்பித்து சிகிச்சைகள் பெற்று வந்தபோதிலும் தொடர்ந்து எதிர்மறையான சிந்தனைகளை கொண்டு அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி சூர்யா தீ வைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். அதற்குள் 60 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் பரவிவிட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சூர்யா உயிரிழந்தார். …

The post திருநங்கை தீக்குளித்து சாவு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Surya (A) Lara ,6th Street of Vyasarbadi B Kalyanapuram ,
× RELATED சென்னை பெரம்பூரில் ரயில்வே கிடங்கில் தீ விபத்து..!!