×

பறவையின் மூளைக்குள் செயற்கை உணரிகளை பொருத்தி பாடல் பாடவைக்கலாம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

ஜீப்ரா பிஞ்சஸ் பறவைகளின் மூளைக்குள் செயற்கை உணரிகளை பொருத்துவதன் மூலமாக அப்பறவைகளை ராக தாளங்களை புரிந்து பாடவைக்கமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் வாழும் ஆண் ஜீப்ரா பிஞ்சஸ் பறவைகள் பாடும் தன்மையை பெற்றுள்ள நிலையில், தனது குஞ்சு பறவைகளுக்கும் அவற்றை கற்றுக்கொடுக்கின்றன. இந்நிலையில், யூடிஎஸ்டபுள்யூ எனும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக்குழு ஒன்றை இப்பறவைகளின் மூளைக்குள் செயற்கை உணரிகளை செலுத்தி வெவ்வேறு பரிமாணங்களில் பாடவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில்  , செயற்கையாக அதீத நினைவுத் திறனை பறவைகளுக்கு வழங்கி, ராக தாளத்தை அவை புரிந்துகொண்டு பாடும்படியாக வடிவமைக்கப்பட்ட  செல்களை பறவையின் மூளைக்குள் உட்செலுத்தி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் பறவைகளை புதிய பரிமாணத்தில் பாடவைக்கமுடியும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த ஆராய்ச்சி மேலும் மேம்பட்டு முழுமையான வெற்றியை பெரும் பட்சத்தில் மனிதர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது, குறிப்பாக ஆட்டிசம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு முறையாக பேச இயலாதவர்களை இதன் மூலம் முறையாக பேச வைக்க இயலலாம் எனவும்  கூறப்படுகிறது.

Tags : Researchers , Bird, brain, artificial sensor, song
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...