×

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்தார் மயங்க் அகர்வால்

விசாகப்பட்டினம்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் எடுத்தது. அப்போது மழை தொடர்ந்து பெய்ததால் நேற்றைய போட்டி கைவிடப்பட்டது. இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் தொடரின் 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மயங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார். 212 பந்துகளில் 102 ரன்களை எடுத்துள்ள மயங்க் அகர்வால் தொடர்ந்து விளையாடி வருகிறார். 206 பந்துகளில் 13 புவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் தனது முதல் சதத்தை மயங்க் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Mayank Agarwal ,South Africa ,series ,Test , India, South Africa, Test Series, Chatham, Mayank Agarwal
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...