×

கோயில்களுக்கு சொந்தமான வீடு, கடை, மனைகளை வரன்முறைப்படுத்த அனுமதி: கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: கோயில்களின் வீடு, கடை, மனைகளை சட்ட விதிமுறைகளின்படி வரன்முறைப்படுத்த அனுமதி வழங்கி அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான கடைகள், மனைகள், வீடுகள் வாடகை மற்றும் குத்தகைக்கு எடுத்தவர்கள் தன்னிச்சையாக வேறு நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர். அவர்களால்  அறநிலையத்துறைக்கு நேரடியாக வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே உள்ள நபர்களின் பெயர்களில் தான் வாடகை செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் ஏற்கனவே உள்ள நபர்களிடம் வாடகை கொடுக்கின்றனர்.  ஆனால், அவர்களோ முறையாக கோயில் நிர்வாகங்களுக்கு வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தற்போது கோயில் மனை, வீடு, கடைகளில் வாடகைக்கு எடுத்தவர்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்று அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதையேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

* பெயர் மாற்றம் செய்தல் குறித்த முன்மொழிவுகள் சார்நிலை அலுவலர்களிடம் இருந்தும் மற்றும் கோயில் வாடகைதாரர்களின் பல்வேறு அமைப்புகளின் மூலம் கோரிக்கைகள் இவ்வலுவலகத்துக்கு வரப்பெறுவதால் பெயர் மாற்றம் செய்தல்  குறித்து அரசாணை மற்றும் சட்டவிதிகளின் படி பரிசீலித்து முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது.

* மேலும் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக விண்ணப்பம் பெறப்படும் போது ஒரு கோயிலில் செய்யப்பட வேண்டிய பெயர் மாற்றம் விண்ணப்பம் பெற்று உரிய விளம்பரம் செய்து ஆட்சேபனை கோரி பெற்று முழுமையாக பரிசீலிக்க  வேண்டும். பெயர் மாற்றம் செய்யும் போது பெயர் மாற்றம் பெறும் நபருக்கு, பெயர் மாற்றம் செய்யும் நாளில் விதிப்படி புதிய நியாய வாடகை, நியாய வாடகை குழுவால் நிர்ணயிக்க வேண்டும். இந்நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய  வேண்டும்.

* மேலும், இது தொடர்பாக விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு இணை ஆணையரால் உத்தரவிடப்பட்ட விவரத்திற்கான முன்னேற்றக அறிக்கையினை உரிய படிவத்தில் இவ்வலகத்துக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாது அனுப்பி  வைக்க வேண்டும்.

* பெயர் மற்றம் நிகழ்வு தொடர்பான நடவடிக்கைகளை துவங்கி உத்தரவு பிறப்பித்து, பெயர்மாற்ற நிகழ்வுகளை முடிவுக்கு கொண்டு வரவும், கோயில்களின் நலன்கருதி கோயிலுக்கு வருவாயை பெருக்கும் வகையிலான தொடர் நடவடிக்கைகள்  எடுக்கவும் இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : houses ,shops ,lodges , temples, sanction houses, shops ,lodges
× RELATED கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்