×

கோவையில் பயிற்சி முடித்த 550 வனக்காப்பாளர்களுக்கு சான்றிதழ் : முதல்வர் எடப்பாடி வழங்கினார்

கோவை: கோவையில் பயிற்சி முடித்த 550 வனக்காப்பாளர்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழக வனத்துறையில் 168 பெண்கள் உள்பட 550 வனக்காப்பாளர், 45 டிரைவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில், கடந்த 6 மாதமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நிறைவுபெற்றுள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் விழா ேநற்று நடந்தது.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 550 பேருக்கு, சான்றிதழ்  மற்றும் பதக்கம் வழங்கினார். பயிற்சி மற்றும் பாடப்பிரிவு உள்பட  அனைத்திலும் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த அனில் விக்னேசுக்கு  சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி, பாராட்டினார். இதையொட்டி, நடந்த வனக்காப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘‘கடந்த 2017ம் ஆண்டின் அறிக்கையின்படி தமிழகத்தின் வனப்பரப்பு 26,281 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இது, 20.21 சதவீதம் ஆகும். நடப்பாண்டில், 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில், சென்னையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இது, நவீனப்படுத்தப்படும். இப்பூங்காவுக்கு இன்னும் அரிய வகை பறவைகள், விலங்குகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “தமிழக வனத்துறையில் காலிப்பணியிடம் இல்லை என்ற நிலை விரைவில் எட்டப்படும். இந்த ஆண்டு டேன்டீ, ரப்பர் தொழிலாளர்களுக்கு தீபாவாளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்படும்” என்றார்.


Tags : 550 Forest Trainees ,Coimbatore. 550 Forest Trainees ,Coimbatore , Certificate for 550 Forest Trainees ,completed their training, Coimbatore
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...