×

டிஎன்சிஏ தலைவராக ரூபா குருநாத் தேர்வு

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  டிஎன்சிஏ தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. பரிசீலனையில், ஒவ்வொரு பதவிக்கும் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தலைவராக ரூபா குருநாத், துணைத் தலைவர்களாக ஜெ.சீனிவாசன் (மாநகரம்), பி.அசோக் சிகாமணி (மாவட்டங்கள்), கவுரவ செயலாளராக ஆர்.எஸ்.ராமசாமி, கவுரவ இணைச் செயலாளராக கே.ஏ.சங்கர், கவுரவ  உதவிச் செயலாளராக என்.வெங்கட்ராமன், கவுரவ பொருளாளராக ஜெ.பார்த்தசாரதி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

டிஎன்சிஏ வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் தலைவராக தேர்வு  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தொழிலதிபரும் பிசிசிஐ மற்றும் ஐசிசி முன்னாள் தலைவருமான சீனிவாசன் மகளாவார். உயர்மட்ட குழு (மாநகரம்) உறுப்பினர்கள்: வி.கருணாகரன், பி.எஸ்.அரவிந்த், எம்.கே.ஸ்ரீவத்ஸவா, என்.விஜய் நிர்மல் குமார், எஸ் பிரபு. உயர்மட்ட குழு (மாவட்டங்கள்) உறுப்பினர்கள்: சண்முகம், கௌதமன், கே.எஸ்.சீனிவாசன்,  ஆர்.திவ்யபிரகாசம். இந்த தகவலை  தேர்தல் அதிகாரியும்  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான டி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். டிஎன்சிஏ 87வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு பற்றி முறைப்படி அறிவிக்கப்பட்டு  அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்வர்.


Tags : Rupa Gurunath ,TNCA ,President , TNCA President, Rupa Gurunath, elected
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...