×

ஆமைகளின் சொர்க்கம்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஈக்வடார் குடியரசின் செழிப்பான ஒரு பகுதி கலபோகஸ் தீவுகள். 21 தீவுகளை உள்ளடக்கிய கலபோகஸ், ஆமைகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. அதிக நாட்கள் உயிர்வாழ்கின்ற ஆமைகளையும், வேறு எந்த இடத்திலும் காண முடியாத ஆமைகளையும் இங்கே மட்டுமே பார்க்க முடியும். சார்ல்ஸ் டார்வின் தனது பரிணாமக் கோட்பாட்டுக்கு கலபோகஸில் வாழ்கின்ற உயிரினங்கள் பெரிதும் உதவியதாகச் சொல்லியிருக்கிறார். யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலிலும் கலபோகஸ் இடம் பிடித்துவிட்டது. கலபோகஸில் உள்ள மூன்றாவது பெரிய தீவு ஃபெர்னாண்டினா. ஒரு காலத்தில் இந்தத் தீவில் அதிகமாக வசித்த ஓர் ஆமை இனம் `Fernandina Giant Tortoise’. இந்த இன ஆமையில் ஒரே ஒரு பெண் ஆமை மட்டுமே மிஞ்சியிருந்தது. அதையும் கடைசி யாக 1906-இல்தான் பார்த்திருக்கின்றனர். அதற் குப் பிறகு அந்த ஆமை யார் கண்ணிலும் படவில்லை.

‘‘பல நூறு ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்துவந்த `Fernandina Giant Tortoise’ என்ற ஆமை இனம் அழிந்து விட்டது...’’ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த ஆமையின் அத்தியாயத்தை முடித்துவிட்டனர் ஆராய்ச்சியாளர்கள். சமீபத்தில் கலபோகஸ் தீவில் Giant Tortoise Restoration Initiative (GTRI) என்ற ஒரு திட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி கலபோகஸ் தீவில் உள்ள ஆமைகளை இன வாரியாகக் கணக்கெடுத்துள்ளனர். அந்தக் கணக்கெடுப்பில்தான் `Fernandina Giant Tortoise’ இனத்தைச் சேர்ந்த ஒரு ஆமை இன்னும் உயிருடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆமையும் பெண்தான். வயது நூறுக்கும் மேல் இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சமீபத்தில் ‘டைம்’ பத்திரிகை, உலகின் சிறந்த 100 இடங்களில் கலபோகஸ் தீவுகளுக்கும் இடம் கொடுத்து கௌரவித்துள்ளது.

Tags : paradise , Tortoise, Paradise, Galapagos Island, UNESCO
× RELATED 10ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல்...