சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை டிரைலர் வெளியீடு

சென்னை: சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் வழங்க, சன் பிக்சர்ஸ் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாராகியுள்ள படம், ‘’நம்ம வீட்டுப் பிள்ளை’’. இது சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் 16வது படமாகும். இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. பாண்டிராஜ் இயக்குகிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி, அருண்ராஜா காமராஜ், இயக்குனர் விக்னேஷ் சிவன், ஜி.கே.பி ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.

ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் செய்ய, கே.வீரசமர் அரங்கம் அமைக்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன், பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சூரி, யோகி பாபு, நட்டி என்கிற நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அர்ச்சனா, அருந்ததி உள்பட பலர் நடிக்கின்றனர். நேற்று மாலை ‘’நம்ம வீட்டுப் பிள்ளை’’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகி டிரென்டிங் ஆனது. இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags : release ,Sun Pictures ,Sivakarthikeyan , Sun Pictures, Sivakarthikeyan, Starring, Our Home Child, Trailer, Release
× RELATED ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்