ஆதிதிராவிட நலத்துறை திட்ட பணிகளை தாட்கோ மூலம் மட்டும் செய்யட்டும்

* பொதுப்பணித்துறைக்கு தேவையில்லை

* முதன்மை தலைமை பொறியாளர் கடிதத்தால் சர்ச்சை

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் மாணவ, மாணவியர் விடுதிகள், பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக தாட்கோ மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு, கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இப்பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தாட்கோ மூலம் செய்வதற்கு பதிலாக பொதுப்பணித்துறையிடம் அந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கடந்தாண்டு சென்னையில் 14 விடுதிகளில் சுற்றுச்சுவர், கழிவறை, அலமாரி அமைப்பது, சிசிடிவி கேமரா பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து ஆதிதிஇந்த நிலையில், சமீபத்தில், ஆதிதிராவிட விடுதிகளில் ஈ, கொசு பிடிக்கும் இயந்திரம் வாங்குவதற்கு  65 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஈ, கொசு பிடிக்கும் 16 இன்ச் அளவு கொண்ட இயந்திரத்தின் விலை ஒன்று ₹4,400 வரை நிர்ணயம் செய்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் 16 இன்ச் அளவு கொண்ட அந்த இயந்திரம் விலை வெறும் ₹2,400 மட்டும் தான். ஆனால், கூடுதலாக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இது தொடர்பாக, பொதுப்பணித்துறைக்கு ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், ஆதிதிராவிடநலத்துறை செயலாளர் ஓட்டெம் டாய் மற்றும் அந்த துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோருக்கு பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆதிதிராவிட நலத்துறைக்கான கட்டுமானம், பராமரிப்பு மற்றும் இதர பணிகளை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டாம். தாட்கோ மூலம் அந்த பணிகளை செய்து கொள்ளலாம் என்று அந்த கடிதத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு துறைகளுக்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை செய்து வரும் பொதுப்பணித்துறை சார்பில் ஆதிதிராவிட நலத்துறைக்கான எந்த பணிகள் வேண்டாம் என்று கடிதம் எழுதியிருப்பது அந்த துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: