×

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு

மும்பை: பொருளாதார மந்த நிலை ஒருபுறம் அச்சுறுத்தும் வேளையில் அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் நம்பிக்கை வகையில் இல்லை. சரிவைத்தான் சந்தித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில்  இல்லாத அளவிற்கு மதிப்பு குறைந்துள்ளது. அதாவது ஒரு டாலர் ரூ71க்கு சமம் என்ற நிலையில் சிறிது ஏற்றம் இறக்கத்துடன் இருக்கிறது. பெருளாதார மந்த நிலை காரணமாகவும் அதிக வரி விதிப்பாலும் பங்குச்சந்தைகளில் இருந்து அன்னிய  நிறுவன முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பங்குகலை விற்று பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ரூ.26,980 கோடி அளவுக்கு திரும்பப் பெற்றுள்ளனர். அதேவேளையில் அமெரிக்கா,  சீனா இடையிலான வர்த்தகப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் சர்வதேச நிலையில் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். சீனாவின் கரன்சி யுவான் மதிப்பும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.  இதுபோன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது.

முக்கிய காரணங்கள்
* சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் பெரிய அளவில் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேவேளையில், பொருளாதார மந்த நிலை, பங்குச்சந்தைகளில் இருந்து அதிக அளவில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்  பணத்தை திரும்பப் பெற்றது ஆகிய இரண்டு காரணங்கள் ரூபாய் மதிப்பு சரிவதற்கு முக்கிய காரணங்களாகும் என்று செலவாணி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
* பொருளாதார மந்தநிலை காரணமாக, கார்கள் முதல் சாதாரண உணவு பண்டங்கள் வரையில் விற்பனை குறைந்துள்ளது. இதனால், வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது. கடந்த  ஜூன் மாத்துடன் முடிந்த காலாண்டில மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதமாக குறைந்துவிட்டது.
* அடுத்து வரும் நாட்களில் மேலும் ரூபாய் மதிப்பு சரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சில பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
* 2019ம் ஆண்டின் எஞ்சிய 4 மாதங்களும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.72.50 வரையில் சிறிய, ஏற்றம் இறக்கத்துடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.



Tags : Dollar, rupee, depreciation
× RELATED அணு ஏவுகணை தாக்குதல் பற்றி...