அணு ஏவுகணை தாக்குதல் பற்றி எச்சரிக்கும் ஐஎன்எஸ் துருவ் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு: இந்திய பெருங்கடலில் முக்கிய பங்கு வகிக்கும்

விசாகப்பட்டினம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமும் (என்டிஆர்ஓ) இணைந்து, முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஐஎன்எஸ் துருவ் போர்க்கப்பல் கட்டப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த கப்பல், இந்திய கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் துருவ் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் செயற்கைக்கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கண்காணிப்பு கப்பலாகும். இந்தியாவை உளவு பார்க்கும் செயற்கைக்கோள்களை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் நவீன தொழில்நுட்பத்தை இக்கப்பல் கொண்டுள்ளது.

மேலும், எதிரிநாடுகளின் அணு ஏவுகணைகள் மிக நீண்ட தூரத்தில் வரும் போதே கண்காணித்து எச்சரிக்கை செய்யும். எதிரிகளின் நீர்மூழ்கிகளை கண்டுடிப்பதற்கான கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சீனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத ஏவுகணைகளை வைத்துள்ளன. அவ்விரு நாடுகளும் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சூழலில், வான் மற்றும் கடல் வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க ஐஎன்எஸ் துருவ்  பெரிதும் உதவும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்தாண்டு ஜனவரியில்

36வது ரபேலும் சப்ளை

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 26 விமானங்கள் தரப்பட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களுக்கு தலா 3 விமானங்கள் என மற்றவை சப்ளை செய்யப்பட உள்ளன. 36வது விமானத்தில் இந்தியா கேட்டுக் கொண்டபடி புதிதாக 13 சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்படுவதால், அது மட்டும் அடுத்தாண்டு ஜனவரியில் ஒப்படைக்கப்பட உள்ளது.

‘வானத்தின் மீது கண்’

‘வானத்தின் மீது கண்’ என்ற பெயரில் ரூ.11 ஆயிரம் கோடி செலவில், விமானப்படைக்கு அதிநவீன சிறப்பு போர் மற்றும் கண்காணிப்பு விமானங்களையும் இந்திய விமானப்படை விரைவில் வாங்க உள்ளது.

Related Stories:

>