×

குமாரசாமிக்கு ஒத்துழைப்பு தர முடியாவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்: காங்.குக்கு மஜத எச்சரிக்கை

பெங்களூரு: ‘‘முதல்வர் குமாரசாமி ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை என்றால், ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் வெளியேறலாம்,’’  என மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் விஸ்வநாத் ஆவேசமாக கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மஜத கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

இக்கட்சியை சேர்ந்த குமாரசாமி, முதல்வராக இருக்கிறார். இவரை செயல்பட விடாமல் காங்கிரஸ் தலைவர்கள் தொல்லைகள் கொடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பேட்டியளித்த முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவகவுடா, ‘கூட்டணி ஆட்சிக்கு காங்கிரசார் தொல்லைகள் கொடுக்கின்றனர். அவர்களை கட்சி மேலிடத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இந்த ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது’ என தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இதற்கு பதிலளித்த காங்கிரசை சேர்ந்த துணை முதல்வர் பரமேஸ்வர், ‘கூட்டணி ஆட்சி என்றால் சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும். இதை சகித்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும், கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்’ என கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மஜத.வின் கர்நாடகா மாநில தலைவர் விஸ்வநாத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேவகவுடாவை முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தரக்குறைவாக பேசுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன்  கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் மஜத.வுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தனியாக போட்டியிட்டி இருந்தால் மஜத.வுக்கு 4 முதல் 5 இடங்கள் கிடைத்திருக்கும். குமாரசாமியின் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை என்றால், காங்கிரஸ் தனது ஆதரவை தாராளமாக திரும்பப் பெற்றுக் கொண்டு, கூட்டணியில் இருந்து வெளியேறலாம்,’’ என்றார். இதனால், காங்கிரஸ் - மஜத இடையிலான வார்த்ைத போர் மேலும் தீவிரமாகி இருக்கிறது.

Tags : coalition ,Majatha , Kumaraswamy, Cooperation, Alliance, Exit, Cong., Majata, Warning
× RELATED டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி கட்சி...