தேர்தல் முடிவு வெளியாவதால் பங்குச்சந்தை மீது செபி தீவிர கண்காணிப்பு

மும்பை: தேர்தல் முடிவு இன்று வெளியாகும் நிலையில், பங்குச்சந்தை நிலவரங்களை செபி தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது. மத்தியில் நிலையான அரசு அமையுமா என்ற பதைபதைப்பில் முதலீட்டாளர்கள் இருந்ததால், கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 9 நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த 9 நாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ.8.53 லட்சம் கோடியை இழந்தனர். கருத்துக்கணிப்பில் பாஜ வெற்றி பெறலாம் என்று வெளியானதால், பங்குசந்தைகள் கடந்த திங்கட்கிழமை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தை 1,422 புள்ளிகள் அதிகரித்தது. மாலை வர்த்தக முடிவில் பங்குகள் மதிப்பு ரூ.5,33,463.04 கோடி உயர்ந்து ரூ.1,51,86,12.05 கோடியானது. மறுநாள் சற்று சரிந்த பங்குச்சந்தை, தேர்தல் முடிவு எதிர்பார்ப்பில் நேற்று சிறிது உயர்ந்தது. இன்று முடிவுகள் வெளியாவதால், பங்குச்சந்தையில் செயற்கையான பங்கு விலை ஏற்றத்தை தடுக்க கண்காணிப்பை செபி தீவிரப்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>