×

தாஹிர் 300

டி20 போட்டிகளில் 300 விக்கெட் கைப்பற்றிய 7வது பந்துவீச்சாளர் என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்சின் இம்ரான் தாஹிருக்கு (தென் ஆப்ரிக்கா) கிடைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம்  மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த குவாலிபயர்-1 ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டினார். டுவைன் பிராவோ (488), லசித் மலிங்கா (377), சுனில் நரைன் (370), ஷாகிப் அல் ஹசன் (346), ஷாகித்  அப்ரிடி (333), சோகைல் தன்வீர் (326) ஆகியோருக்கு அடுத்த இடத்தை தாஹிர் பெற்றுள்ளார்.

Tags : Tahir 300 , Tahir, 300
× RELATED 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...