×

சீர்காழி அருகே திருநகரியில் எண்ணெய் கிணறு அமைத்த இடத்தில் வாயு கசிவு: மூச்சு திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சீர்காழி: சீர்காழி அருகே திருநகரியில் எண்ணெய் கிணறு அமைத்த இடத்தில் இருந்து ஒருவிதமான வாயு வெளியேறுவதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரியில் விளை நிலங்களுக்கு இடையே தனியார் எண்ணெய் நிறுவனம் கிணறு அமைத்து எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் எண்ணெய் எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் தனது பணியை தொடங்கியுள்ளது.

இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்த ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது திருநகரியில் எண்ணெய் நிறுவனம் அமைந்துள்ள கிணறு பகுதியில் ஒருவிதமான வாவு வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், இதய நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் நிலத்தடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் வாயு குறித்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gas leak ,oil well ,Tirunagar ,Sirkazhi , Tirur, Gas leak, place ,oil , Public accusation
× RELATED எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்:...