×

எம்எல்ஏக்களின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை ஜனநாயகத்தின் வெற்றியாக கருதுகிறேன்: வைகோ அறிக்கை

சென்னை:  எம்எல்ஏக்களின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை ஜனநாயகத்தின் வெற்றியாக கருதுகிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆட்சியைப் பறிகொடுத்துவிடுவோம் என்ற அச்சத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்காக பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இதை ஜனநாயகத்தின் வெற்றியாக கருதுகிறேன். சட்டப்பேரவைத் தலைவர் தான் எடுத்த முயற்சியை கைவிட்டுவிட்டு, பேரவையில் எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அவர் சந்திப்பதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறையாக இருக்கும் என கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூ: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக சட்டப்பேரவை தலைவர் தொடர்ந்து சட்ட வரம்புகளை மீறி செயல்பட்டு வருகிறார். 3 எம்எல்ஏக்களுக்கு பேரவைத்தலைவர் நோட்டீஸ் அளித்தது சட்ட விரோதமானதாகும். இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம் அதற்கான இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும் பேரவைத்தலைவர் விளக்கமளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறி எடப்பாடி அரசை காப்பாற்றும் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்ட பேரவைத்தலைவர் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். பேரவைத்தலைவரின் செயல்பாடு சட்டமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதாக உள்ளது’’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA, ban, democracy, Vaiko, report
× RELATED மரணத்திலும் எடப்பாடி பழனிசாமி...