×

எதிர்க்கட்சிகளை குறிவைத்தே தேர்தல் வரை நடந்தது சோதனை: ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைப்பு செயலாளர், எம்பி

இந்த நாடாளுமன்ற தேர்தலில், இந்திய தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று  பிரதமர் மோடி நினைக்கிறார். அதனால் தான் நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. அதிலும், தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை கூட தொடர்ந்து எதிர்கட்சிகளை குறிவைத்து ரெய்டுகள் நடந்தன.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள எடப்பாடி அரசு மீது பல புகார்களை எதிர்க்கட்சியான  திமுக அளித்தது. ஆனால், அந்த புகார்களின் பேரில் கூட ஆளும் கட்சிகாரர்களின் வீட்டில் எந்த ரெய்டும் நடக்கவில்லை. அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல் தொடர்பாக திமுக சார்பில்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது தொடர்பாக ரெய்டு நடத்தவும் கூட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆனால் எந்த வித தொடர்பும் இல்லாமல் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான கனிமொழியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

அந்த இடத்தில் எதுவும் இல்லை என்றவுடன் அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர். திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சம்பந்தமே இல்லாத இடத்திலிருந்து பணத்தை எடுத்துவிட்டு அவர் மீது களங்கம் கற்பிக்க பார்க்கிறார்கள்.   
 அவரது வீட்டில் இருந்து எந்த பணத்தையும் எடுக்கவில்லை. அவரது மனைவி வீட்டிலிருந்து எந்த பணத்தையும் எடுக்கவில்லை. அவரது மகன் வீட்டிலிருந்தும் எந்த பணத்தையும் எடுக்கவில்லை. யாரோ ஒருவரது வீட்டிலிருந்து எடுத்துவிட்டு பொருளாளர் துரைமுருகனுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இந்தியாவில் தன்னாட்சி அதிகாரம் கொண்டுள்ள அமைப்புகளை எல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்த மோடி முயற்சி செய்து வருகிறார். இதை உச்சநீதிமன்றம் கண்காணித்து கொண்டு இருக்கிறது. மிக விரைவில் உச்சநீதிமன்றத்திலிருந்து இதற்கான பதில் அவர்களுக்கு கிடைக்கும். மத்தியில் ஆளும் கட்சி மீது உச்சநீதிமன்றம் மிகவும் கோபமாக உள்ளது. ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆளும் கட்சி மீது கோபமாக உள்ளது. மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தை ரிமோட் மூலம் இயக்கும்  எண்ணத்தில் இருக்கிறதா என்ற கோணத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு தொடர்பாக எந்த வீடியோவும் வரவில்லை. அது தொடர்பாக எந்த தகவலும் வெளியே வரவில்ைல. ஆளும் கட்சியினர் வீட்டில் ரெய்டு நடக்கும் போது அது தொடர்பான வீடியோ எதுவும் வெளிவரவில்லை. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் பணம் இருக்கிறது என்று நாங்கள் தெரிவித்தோம். இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களிடம் விசாரணை கூட நடத்தவில்லை. மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் அமைந்த பின்பு தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் தன்னாட்சி அதிகாரம் கொண்டுள்ள அமைப்புகளை எல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்த மோடி முயற்சி செய்து வருகிறார். இதை உச்சநீதிமன்றம் கண்காணித்து கொண்டு இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : RS Bharath ,Elections Test ,Opposition ,DMK , Opposition, Target, Election, Test, RS Bharath
× RELATED டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது