×

இந்தியாவிலேயே உருவாகும் புதிய ரெனோ டஸ்ட்டர்

2012ம் ஆண்டு காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் முதலாவது மாடலாக வந்த ரெனோ டஸ்ட்டர் கார், துவக்கத்தில் பெரிய ஹிட் மாடலாக வலம் வந்தது. இதன் மார்க்கெட்டை குறி வைத்து பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டதால், சந்தையில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ரெனோ டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை மாடல் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அந்த மாடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை. எனினும், மாற்றங்கள் செய்யப்பட்ட பேஸ்லிப்ட் மாடலானது மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட மாடலாக வர இருக்கும் இப்புதிய மாடலில், பல்வேறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன், வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சிறிய டிசைன் மாற்றங்களுடன் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு புதிய மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், ரெனோ டஸ்ட்டரின் பெட்ரோல், டீசல் இன்ஜின்கள் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

எனவே, புதுப்பொலிவுடன்கூடிய மாடல் மிக விரைவில் வர இருப்பது உறுதியாகிவிட்டது. இதனிடையே, ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ரக காரின் மூன்றாம் தலைமுறை மாடலானது இந்தியாவிலேயே உருவாக்கப்பணிகள் நடக்கிறது. தற்போது ரெனோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் டேஸியா நிறுவனம்தான் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ரக காரை தயாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு ரெனோ பிராண்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பாவில் மின்சார கார்கள் பக்கம் சந்தை திரும்பி வருவதால், மூன்றாம் தலைமுறை டஸ்ட்டர் காரை, ரெனோ நிறுவனமே நேரடியாக உருவாக்க இருப்பதாகவும், அந்தப் பணிகள் இந்தியாவில் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India , Renault Duster, India
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!