×

ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளியது ஜியோ

புதுடெல்லி: ஜியோ நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தை 3ம் இடத்துக்கு தள்ளிவிட்டு, நாட்டின் 2வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவாகியுள்ளது. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பரில் இருந்து தனது சேவையை துவக்கியது. குரல் அழைப்புகள் முதல் இணைய டேட்டா வரை அனைத்து சேவைகளையும் இலவசமாகவே வழங்கியது. இதில் டிவி,  செய்தித்தாள், மாதாந்திர இதழ்கள் உட்பட பிரைம் சேவைகளும் அடக்கம். இதனால் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதன் வரவால் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்தன.

 ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 30.6 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், இதுவரை 2வது இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனத்தை 3ம் இடத்துக்கு தள்ளியுள்ளது ஜியோ. ஏர்டெல் நிறுவனத்தில் 28.4 கோடி  வாடிக்கையாளர்கள் உள்ளனர். வோடபோன் - ஐடியா நிறுவனம் 38.7 கோடி வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Airtel , Airtel, Rolled ,Geo
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...