×

முட்டை விலையை நிர்ணயம் செய்வதில் குளறுபடி : தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மீது கோழிப் பண்ணையாளர்கள் புகார்

நாமக்கல்: முட்டை விலையை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மீது கோழிப் பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல்லில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டைகளை கொள்முதல் செய்து வருகிறது. மேலும் முட்டையின் விலையும் இந்த குழுவே நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் கோழிப்பண்ணையாளர்களின் நலனுக்கான ஏற்படுத்தப்பட்ட விலை நிர்ணய குழுவானது.

தங்களுக்கு எதிராக செயல்படுவதாக பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மேலும் பண்ணைகளில் விற்பனை செய்யப்படும் விலைக்கு அதிகமாக முட்டையின் விலையை நிர்ணயம் செய்து வருவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மீது பண்ணையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து முட்டையை வாங்க உள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Complainers ,National Egg Coordination Committee , Egg prices, mess, National Egg Coordination Committee, Poultry farmers, Complaint
× RELATED நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத...