×

நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்வு: தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முட்டை உற்பத்திக்கு பிரத்யேகமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் கேரளா மாநிலத்திற்கும், சத்துணவாயு திட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது. மீதமுள்ள முட்டைகளை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், விற்பனைக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோடைகாலம் தொடங்கியது முதல் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முட்டை விற்பனை மற்றும் நுகர்வு அதிகரித்து வருவதால் அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.25 காசுகளாக இருந்ததே இதுவரை அதிகபட்ச விலையாக இருந்தது. இந்த விலையானது அப்போது 14 நாட்கள் நீடித்தது. அதன்பின்னர் முட்டை விலை, படிப்படியாக மாற்றம் கண்டது.

இந்நிலையில் மீண்டும் தமிழக கோழிப்பண்ணை வலராற்றில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, நேற்றிரவு முட்டை ஒன்றின் விலை ரூ.5.35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்கெனவே ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றின் இறைச்சி விலை கடுமையாக உயர்ந்து உள்ள நிலையில் ஏழைகள் நுகரும் வகையில், முட்டையின் விலையும் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.             


Tags : Namakkal ,National Egg Coordination Committee , Namakkal, Egg Price, Rise, National Egg Coordinating Committee, Announcement
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...