×

தங்கம் வாங்க நல்ல நேரம்… ஒரு சவரன் ரூ. 53,200க்கு விற்பனை.. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2000 விலை குறைந்தது!!

சென்னை: தங்கம் விலை இன்று காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.890 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் , மே மாதங்களில்ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக மே மாதம் 20ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,690க்கும், சவரன் ரூ.55,200க்கும் விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஒவ்வொரு நாளும் குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ.54,880க்கு விற்கப்பட்டது.  நேற்று தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,650க்கு விற்பனையாகிறது.

இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட அதிக விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது விசேஷத்திற்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கம் வாங்க நல்ல நேரம்… ஒரு சவரன் ரூ. 53,200க்கு விற்பனை.. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2000 விலை குறைந்தது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED விஷச் சாராய மரணம் – மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு