டிடிஎட் தேர்வு எழுதியவர்களுக்கு 23ம் தேதி சான்று

சென்னை: டிடிஎட் படிக்கும் மாணவர்களுக்கான முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 23ம் தேதி முதல் மதிப்பெண் சான்றுகள் வினியோகிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பு (டிடிஎட்) படித்து வரும் முதலாம் ஆண்டு, இண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடந்தது.

அதற்கான மதிப்பெண் சான்றுகள் அந்தந்த பயிற்சி நிறுவனங்கள், தனித் தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக 23ம் தேதி மதல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான பட்டியத் தேர்வுகள் ஜூன் 14ம் தேதி தொடங்கி  29ம் தேதி வரை நடக்கிறது. தேர்வில் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நிர்வாக சீர்கேட்டால் தடுமாறும்...