வேலூர் காட்பாடியில் கனரா வங்கி மேலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் கனரா வங்கி மேலாளர் தியாகராஜனின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட ஓடை பிள்ளையார் பகுதியில் உள்ள 7வது கிழக்கு குறுக்குத்தெரு பகுதியில் கனரா வங்கி மேலாளர் தியாகராஜன் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை அரசியல் சம்பந்தப்பட்டதா? அல்லது மற்ற காரணங்களா? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

இதுதவிர முறையாக வரி செலுத்தவில்லை என்று வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் நிறுவனம் நடத்தி வரும் மருந்தகம் மற்றும் பல்பொருள் அங்காடியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனையில் சுமார் 43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, கனரா வங்கி மேலாளர் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காரைக்குடியில் கனரா வங்கி கிளை துவக்கவிழா