×

கிண்டி ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க 2 கோடி ஒதுக்கி நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வாக்கு சேகரிப்பு

சென்னை: தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர்ஜெயவர்தன்நேற்று காலை 170, 174வது வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். கிண்டி  ரேஸ்கோர்ஸ் அருகில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அவருடன், அதிமுக மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, சாமிநாதன், ராஜேந்திர பாபு, எம்.எம்.பாபு, கடும்பாடி, பகுதி செயலாளர் என்.எஸ்.மோகன் மற்றும் பழனி, பாலசுப்ரமணி,  170வது வட்ட செயலாளர் சேக் அலி, 174வது வட்ட செயலாளர் சீனு,  போர் ரவி, வட்ட பொறுப்பாளர்  வசந்தகுமார்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாமக வடிவேல், தேமுதிக வி.சி.ஆனந்தன், பாஜ நிர்வாகிகள் டால்பின் தர்,  தமாகா மாவட்ட தலைவர் சைதை மனோகர், சமக பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி எஸ்.என்.ரமேஷ், புரட்சி பாரதம் ராஜி உட்பட பலர் திரளாக சென்று பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.  பிரசாரத்தின் போது,  ஜெயவர்தன் பேசும்போது, ‘தொகுதி முழுவதும் மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

ஒவ்வொரு பகுதிக்கும் பிரசாரத்துக்கு செல்லும்போது, நான் செய்த  திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறேன். உங்களின் ஆதரவு இந்த தேர்தலில் தொடருவதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். கிண்டி ரயில்வே சுரங்கப்பாதை கட்ட ₹2 கோடி ஒதுக்கி அந்த பணிகளை  சுணக்கம் இல்லாமல் நடக்க நடவடிக்கை எடுத்தேன்.  இந்த தொகுதியில் இருந்து செல்வதாக இருந்த மத்திய அரசு நிறுவனங்களை, அவற்றிற்கு தேவையான நிலங்களை ஒதுக்கி இங்கேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுத்தேன். இப்படி பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தியதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள்’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,Gunti ,AIADMK ,railway tunnel ,Jayawardan , 2 crore,Gunti railway, tunnel, AIADMK candidate ,Jayawardan
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...