×

சொந்த ஊரில் ஓட்டுபோட ஏசி பஸ்சில் ஜாலி டிரிப் அடிக்கும் வாக்காளர்கள்: அதகளம் பண்ணும் அரசியல்வாதிகள்

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் பெரும்பாலானோர் வேலை, படிப்பு மற்றும் தொழில் நிமித்தமாக வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வந்து தங்கி உள்ளனர். அந்த வகையில் பல லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இன்றும் சொந்த ஊரில் இருக்கிறது. இவர்களில் கூலித்தொழிலாளிகள் முதல் பெரி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வரை பலர் மீண்டும் சொந்த  ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களின் ரேசன் கார்டை சென்னை முகவரிக்கு மாற்றுவதில்லை. சொந்த ஊரிலேயே ரேசன் கார்டுகளை வைத்துள்ளனர். தேர்தலை ஒட்டி தொடர் விடுமுறை வருவதால், தனியார் பஸ் கட்டணமும் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையின் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெருவாரியாக உள்ளனர்.  அவர்கள் தங்கள் மாவட்டத்துக்கு சென்று தேர்தலில் வாக்களித்துவிட்டு வர, இலை சார்பில் இலவச ஏசி பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல் தேர்தலில் ஓட்டுபோட பணம் வழங்குவதோடு, பஸ்சில் அழைத்து செல்லும் போது அசைவ உணவும் வழங்குகிறார்கள். இதனால் தேர்தல் நியாயமாக நடக்குமா என்று சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே கேரளாவில், வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊருக்கு வந்து செல்ல, விமான டிக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டு ஓட்டு வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓட்டுகளை இதுபோன்ற வழிகளில் விலைக்கு வாங்கும் முயற்சிகளை தேர்தல் ஆணையம் எப்படி தடை செய்யப்போகிறது. தேர்தலை நியாயமாக நடத்த, தேர்தல் ஆணையம் புதிய முயற்சிகளை மேற்கொண்டாலும், தேர்தல்  ஆணையம் கண்டுபிடிக்க முடியாத புதுப்புது வழிகளில் சில அரசியல் கட்சிகள் வாக்குகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவது தொடர்கிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jolly Tribe Voters ,AC ,Country , Drive ,your hometown, Voters , AC ,
× RELATED ஓபிஎஸ், டிடிவி, ஏ.சி.சண்முகம்,...