×

இந்தியாவிற்கு எம்எச் 60 ரக ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல்!

வாஷிங்டன் : இந்தியாவிற்கு எம்எச் 60 ரகத்தை சேர்ந்த 24 ரோமியோ சீஹாக் என்ற பல்முனை பயன்பாடுகளை கொண்ட ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்டின் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்க இருக்கிறது. ஏறத்தாழ 16 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும் இந்த எம்எச் 60 ரகத்தை சேர்ந்த 24 ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் கடல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் இந்த பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீர்மூழ்கி கப்பல்கள் எதிர்ப்பு திட்டங்களில் இவை செயல்படுத்தப்படும்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஆதரவளிக்கும் விதத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வலு சேர்க்கும் விதமாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. அந்நிய நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்கும் திட்டத்தின் கீழ், எம்எச் 60 ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்ய உள்ளதாக தகவல் அளித்துள்ளனர். இந்த எம்எச் 60 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறித்து அவற்றை தாக்க முடியும். மேலும் இந்த ஹெலிகாப்டரில் வானில் இருந்து தரையில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள், துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள், எம்கே 54 ரக நீர்மூழ்கி குண்டுகள் ஆகிய ஆயுதங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : USA ,MH60 ,Romeo Seihak ,India , India, Romeo Seahak Helicopter, United States, Lockheed Martin
× RELATED ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா –...