×

நாண்டெட்டில் அசோக் சவான் போட்டி: மகாராஷ்டிரா 23 தொகுதிகள்

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவானுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்த நிலையில், கட்சிக்குள் எந்த பிரச்னையும் கிடையாது என்றும் மக்களவைத்  தேர்தலில் நாண்டெட் தொகுதியில் தாம் போட்டியிடுவதாகவும் அசோக் சவான் நேற்று அறிவித்தார். அசோக் சவான் பேசும் ஆடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவர் தனது பேச்சை  கட்சியில் யாரும் கேட்பதில்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில், கட்சி மேலிடத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதாலும், அசோக் சவான் விரும்பியபடியே சந்திராப்பூர் தொகுதியை கட்சி மேலிடம் மாற்றியிருப்பதாலும்  அசோக் சவான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக கருதப்படுகிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maharashtra ,Ashok Chavan Competition , Nanded, Ashok Chavan, Competition, Maharashtra
× RELATED மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு!