×

மக்களவை தேர்தல் 2019: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 7 தொகுதிகளில் முதற்கட்டமாக 5 தொகுதிகளுக்கான  வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

1. தருமபுரி: அன்புமணி ராமதாஸ்

2. விழுப்புரம்: வடிவேல் ராவணன்

3. கடலூர்: இரா.கோவிந்தசாமி

4. அரக்கோணம்: ஏ.கே.மூர்த்தி

5. மத்திய சென்னை: சாம் பால்


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,Election ,candidate , 2019 Lok Sabha Election, PMK candidate list,
× RELATED 18வது மக்களவை தேர்தல்; நாடு முழுவதும்...