×

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு உயிர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்தே அத்தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் அடுத்த இரு மாதங்களுக்கு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆன்லைன் சூதாட்ட அரக்கனின் பிடியிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெற வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Govt. ,CHENNAI ,BAMA ,President ,Tamil Nadu government ,Madras High Court ,Srinivasan ,Mangat ,High Court ,
× RELATED கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு – அன்புமணி