×

வால்பாறை பகுதியில் குட்டியுடன் உலாவும் சிங்கவால் குரங்குகள்

வால்பாறை :  வால்பாறையை அடுத்த புதுத்தோட்ட எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்தில், சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளது. சிங்கமுகத் தோற்றத்துடன் இருப்பதால் சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை பகுதியில் உலகின் அரிய வகையான சிங்கவால் குரங்குகள் உள்ளதால் அதனை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கூட்டத்தில் 14 முதல் 80 குரங்குகள் வரை இருக்கும் இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. இக்குரங்கின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை என்பதால், தற்போது பிறந்த சிறு குட்டிகளுடன் குரங்குகள் உலா வருகிறது. குரங்குகள் குட்டிகளுக்கு மரம் ஏறவும், உணவு சாப்பிடவும், மரக்கிளைகளுக்கிடையே தாவிச்செல்லவும் கற்றுக்கொடுத்து வருகிறது.  உயரமான மரங்களுக்கிடையே குட்டிகள் தாவிச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இதனை காண நாள்தோறும் வன ஆர்வலர்கள் மட்டுமன்றி புகைப்பட கலைஞர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வால்பாறை பொள்ளாச்சி மெயின் ரோடாக உள்ளதால் வேகத்தடையும், சாலையின் மேற்புறம் குரங்குகள் கடக்க தொங்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் புதுத்தோட்டம் பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். அதிவேகம் செல்வதை தவிர்க்கவேண்டும். குரங்களுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : valley , Valparai ,Lioness monkey,monkey
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...