×
Saravana Stores

இரவு பணிக்கு சென்ற ஐடி நிறுவன ஊழியர் மர்மச்சாவு: புகார் வாங்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூர் அடுத்த உடன்குடை குப்பதை சேர்ந்தவர் அஜித்குமார் (22). பெசன்ட்நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, கந்தன்சாவடியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சூபர்வைசராக  பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற அஜித்குமார், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால்,  பயந்துபோன உறவினர்கள் இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில், அஜித்தின் தந்தை ரவி, மகன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு போன் செய்துள்ளார். அப்போது, நிறுவனத்தில் உள்ளவர்கள் அஜித்குமாருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து மயங்கிய  நிலையில் உள்ளார் என்று கூறிவிட்டு போனை துண்டித்துள்ளனர்.

இதையடுத்து, மகனை பார்ப்பதற்காக பெற்றோர் அந்த ஐடி நிறுவனத்திற்கு சென்றபோது, அவர்கள் ‘உங்கள் மகன் இறந்துவிட்டார். அவரது சடலத்தை ராயபேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து  விட்டோம்,’ என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவி, உறவினர்களுடன் துரைப்பாக்கம் காவல்நிலையம் சென்று, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். ஆனால், போலீசார் புகாரை வாங்க  மறுத்துள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த அஜித்குமாரின் உறவினர்கள் 50 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து துரைபாக்கம் உதவி கமிஷனர் லோகநாதன் சம்பவ இடத்துக்கு வந்து,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில், அவர்களை போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், துரைபாக்கம் காவல்நிலையத்தில் ஒரு மணி நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IT company employee ,Marcana Chowk , work ,dinner, IT ,Company Employees
× RELATED ஐடி நிறுவன ஊழியரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது